பன்னா மீன் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய மீன் - 1

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீன் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், உப்பு போட்டு பிசறி 10 நிமிடம் வைத்திருக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த மீனை போடவும்.

தீயை மிதமாக வைத்து 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக விடவும்.

3 நிமிடம் கழித்து வெந்ததும் பரிமாறவும்.

குறிப்புகள்: