நெத்திலி வறுவல் (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1 கப்

சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி [உங்கள் காரத்துக்கு ஏற்ப]

மிளகு தூள் - 1 தேக்கரண்டி [உங்கள் காரத்துக்கு ஏற்ப]

எலுமிச்சை சாறு - 1 - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து தூள் வகை எல்லாம் கலந்து எலுமிச்சை சாரு விட்டு பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும். [நீர் சேர்க்க தேவை இல்லை.

மீன் கழுவி உள்ள ஈரமும், எலுமிச்சை சாறுமே போதும்]

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனை நீர் இல்லாமல் எடுத்து போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும். [ரொம்ப க்ரிஸ்பியாக ஆகி விடாமல் எடுக்கவும்]

குறிப்புகள்: