நெத்திலி வறுவல் (2)
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் - 1 கப்
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
கலவை தூள் (மிளகாய், தனியா, மஞ்சள்) - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை - பாதி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து நீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
இதில் தூள் வகை எல்லாம் கலந்து நன்றாக எல்லா மீனிலும் படும்படி பிரட்டி வைக்கவும்.
கடைசியாக எலுமிச்சை சாறும் கலந்து நன்றாக பிரட்டி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான தீயில் மீனை பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
. மீன் பொரிக்கும் போது சிறிது கறிவேப்பிலையையும் போட்டு பொரித்து எடுக்கலாம். மீன் கறிவேப்பிலை வாசம் கலந்து நன்றாக இருக்கும்.
மிளகாய் தூள் தனியாகவோ அல்லது கலவை தூள் (சாம்பார் தூள்) மட்டுமோ சேர்த்தும் செய்யலாம். ஒவ்வொன்றும் சுவை மாறுபடும்.