நெத்திலி வறுவல் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1/4 கிலோ

பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

இஞ்சி விழுது - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி

மீன் சீசனிங் (seasoning) தூள் - 1 மேசைக்கரண்டி[ இந்த தூள் இருந்தால் போடவும் இல்லை என்றால் விட்டு விடலாம்]

சோம்பு தூள் - 1 மேசைக்கரண்டி

சீரக தூள் - 1 மேசைக்கரண்டி

சக்தி மீன் மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

மிளகு தூள் - 1 மேசைக்கரண்டி

லெமன் ஜூஸ் - 2 அல்லது 3 சொட்டு

தேங்காய் பால் - 4 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

மீனுடன் மசாலா தூள் வகை, தேங்காய் பால் எல்லாவற்றையும் சேர்த்து கலந்து பிரட்டி வைக்கவும்.

பல் குச்சியால் (டூத் பிக்கில்) 6 அல்லது 7 ஆக சேர்த்து குத்திக் கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போட்டு பொரித்து எடுக்கவும்.

இரண்டு பக்கமும் நன்கு வேக விடவும். தீயை மிதமாக வைத்து பரிமாறவும். [கொஞ்சம் க்ரிஸ்பியாக வறுத்தால் சுவை அருமையாக இருக்கும்]

குறிப்புகள்:

ரசம், சாம்பார், வற்றல் குழம்பு, காய்கறி குழம்பு அருமையான பொருத்தமாக இருக்கும்.