நெத்திலி மீன் வறுவல் (1)
0
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் - 1/2 கிலோ
எழுமிச்சம் பழம் - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை சுத்தம் செய்து, சிறிது உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து பிசிறி கழுவவும்.
தண்ணீரை சுத்தமாக வடித்து, மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து, எழுமிச்சம்பழத்தைப் பிழிந்து, நன்கு பிசிறி, 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அரிசி மாவை லேசாக தூவி, கலந்து எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.