நாடன் ஆட்டு மூளை பொரியல்
தேவையான பொருட்கள்:
ஆட்டு மூளை - 1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
துருவிய தேங்காய் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 2
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
கறிவேப்பிலை - 2 கொத்து
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 5
செய்முறை:
மூளையில் நரம்புகளை லேசாக நீக்கி உடையாதவாறு சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து வைக்கவும்.
வேறு வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெயை காயவைத்து சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் மூளையை போட்டு மூடி வைக்கவும்.
குறைந்த தீயில் 20 நிமிடம் வெந்தால் போதும் இடையிடையே கிளறிக் கொடுத்து அடிப்பிடிக்காதவாறு பார்த்துக் கொள்ளவும்.
மூளை வெந்து பொரியல் போல் பொடியும்பொழுது அரைத்த தேங்காய் விழுதைக் கொட்டி ஒரு நிமிடம் கிளறவும்.
நன்கு வெந்து பாத்திரத்துடன் மூளை ஒட்டாது முறுவத் தொடங்கும்பொழுது முட்டையை உடைத்து ஊற்றி ஒரு நிமிடம் கிளறவும். பிறகு பரிமாறவும்