நண்டு வறுவல் (3)





1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சதைப்பற்றான நண்டு - 2
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நண்டை சுத்தம் செய்து, (எண்ணெய் தவிர) செய்முறையில் சொன்ன அனைத்தையும் அதன்மேல் போட்டு நன்றாக பிரட்டி கால் மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு பிரட்டிவைத்துள்ள நண்டை அதில்போட்டு, அத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிட்டு, வெந்தவுடன் பிரட்டி விட்டு இறக்கவும்.