நண்டு வறுவல் (2)

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

நண்டு - 5

இஞ்சி - 1 துண்டு

சின்ன வெங்காயம் - 50 கிராம்

தனியா - 2 தேக்கரண்டி

தக்காளி - 1

வத்தல் - 10

சீரகம் - 1 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

பெரிய வெங்காயம் - 3 சுமாரானது

கருவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் நண்டுகளை ஓடு நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும்.

பின் வத்தல், இஞ்சி, பூண்டு, சீரகம், தனியா, சின்ன வெங்காயம் (தோல் நீக்கிக்கொள்ளவும்) இவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கவும், பின் தக்காளியை சேர்த்து வதக்கி அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனதும் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின் நண்டுகளை போடவும் தீயை குறைத்து வைத்து நன்கு வேகவிடவும். நண்டுகள் நன்கு வெந்து வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: