நண்டு வருவல்
0
தேவையான பொருட்கள்:
நண்டு - 1/2 கிலோ
மிளகு - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 துண்டு
சின்ன வெங்காயம் - 20
மஞ்சல் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 அல்லது 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகு, சோம்பு, பட்டை, சீரகம், பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம் எல்லாம் மிக்சியில் அரைத்து கடாயில் ஆயில் ஊற்றி அரைத்ததை சேர்த்து வதக்கி கழுவிய நண்டு சேர்த்து மஞ்சல் தூள், மிளகாய் தூள், தேவையானளவு உப்பு சேர்த்து வேக விட்டு தண்ணீர் வற்றி நண்டும் மசாலாவும் சேர்ந்து வரும்போது இறக்கி பரிமாறவும்.