நண்டு ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நண்டு - 1 கிலோ

சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் பொடி - 1 1/2 தேக்கரண்டி

நறுக்கிய வெங்காயம் - 1 கப்

அரைக்க:

சோம்பு - 1 தேக்கரண்டி

பூண்டு - 10 பல்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் எண்ணைய் 2 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு ஒரு வதக்கு வதக்கி அதனுடன் அரைக்க கொடுத்துள்ளதை சேர்த்து வாசம் போகும் வரை நன்கு வதக்கி பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் நண்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

பின் மிளகாய் தூள் சேர்த்து நன்கு சிவந்து மசாலா நண்டு கறியுடன் ஒட்டி வரும் வரை சமைத்து தண்ணீர் முழுவதுமாக வற்றிய உடன் நிறுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: