தேங்காய் மிளகு வறுத்து அரைத்த நண்டு
தேவையான பொருட்கள்:
நண்டு - 1/2 கிலோ
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலாப் பொடி - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 1/4 கிலோ
சோம்பு - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
எண்ணெய் - 1/4 கிலோ
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நண்டை சுத்தம் செய்து கழுவி நீரை வடித்து இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊற விடவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை பூப்போல் துருவிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் தேங்காய் துருவல், மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் எடுத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த நண்டில் வறுத்த தேங்காய் துருவல், மிளகு சேர்த்து மறுபடியும் பத்து நிமிடம் ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும்.
தாளித்ததும் வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி பிறகு அதனோடு மிளகாய் தூள், கரம் மசாலாப் பொடி சேர்த்து வதக்கவும்.
ஒன்றாக வதங்கியதும் நண்டைச் சேர்த்து வதக்கி தேவையான எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுத்து பரிமாறவும்.