தேங்காய் மிளகு நண்டு
தேவையான பொருட்கள்:
நண்டு - 2
மிளகாய்த் தூள் - 3/4 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 2
சோம்பு - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1/4 மூடி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
நண்டைச் சுத்தம் செய்து கழுவி நீரை வடித்து இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி வைக்கவும்.
வெறும் வாணலியில் தேங்காய் துருவல், மிளகு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்துக் எடுத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த நண்டில் வறுத்த தேங்காய் துருவல், மிளகு சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி விட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் ஊற வைத்த நண்டைச் சேர்த்து பிரட்டவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும். வெந்ததும் கிளறி விட்டு இறக்கி பரிமாறவும்.