தூனா ரோஸ்ட்
தேவையான பொருட்கள்:
தூனா மீன் - 2 டின்
வெங்காயம் - 3
தக்காளி - 1
கறிவேப்பிலை - 2 கொத்து
பட்டை - ஒரு இன்ச் துண்டு
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - 1/4 கப்
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
குருமிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
தூனா டின்னை திறந்து எண்ணெயை வடித்துக் கொள்ளவும்.
பின் ஒரு பானில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பட்டை போட்டு நன்கு பொன்னிறத்தில் வதக்கவும்.
அதில் இஞ்சி, பூண்டு நறுக்கியதை சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கி தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து தக்காளி உடையும் வரை வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், குருமிளகுத் தூள், உப்பு சேர்த்து வதக்கி தூனாவை கொட்டி தீயை மிதமாக்கி விட்டு கிளறவும்.
2 நிமிடத்தில் மசாலா நன்கு தூனாவில் பிடித்து கீமா போல ரோஸ்டாகி வந்தபின் இறக்கிப் பரிமாறவும்.