தூனா மீன் பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
தூனா மீன் டின் - 400 கிராம்
நாட்டு வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி துண்டு - 2 இன்ச்
பச்சை மிளகாய் - 3
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
வெள்ளை மிளகுப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் டின் மீனை தண்ணீரில்லாமல் வடிகட்டவும்.
வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து வைக்கவும், பெருஞ்சீரகத்தை கொரகொரப்பாக நுனுக்கி வைக்கவும்.
பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு போடவும்.
சிறிது சிவந்ததும் வெங்காயத்தை போட்டு சிவந்து வரும் தருவாயில் பெருஞ்சீரகத்தை போடவும்.
பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி போட்டு கறிவேப்பிலை போட்டு வதக்கிய பின்பு தேங்காய் துருவலை போடவும்,
பிறகு சிறிது நேரம் வதக்கிய பின்பு மீனை போட்டு நன்றாக கிளறவும் அதில் அனைத்து மசாலா பொருட்கள் தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மசாலா வாசனை போன பிறகு இறக்கி பரிமாறவும்.