தன்சல்
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 1/2 கப்
மஞ்சள் பூசணிக்காய் - 1 கப்
பட்டை - சிறு துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - 6
மல்லி விதை - 4 தேக்கரண்டி
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
பசலை கீரை (ஸ்பினாச்) - ஒரு சிறிய கட்டு
கத்தரிக்காய் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை - ஒன்று சிறியது
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிகப்பு மிளகாய் (காய்ந்த மிளகாய்), மல்லி விதை, மிளகு, சீரகம், சோம்பு (1/2 தேக்கரண்டி) ஆகியவற்றை நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
மட்டன் மற்றும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கீரை, பூசணிக்காய், கத்தரிக்காய், எல்லா தூள்களும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் விட்டு 2 ஸ்டீம் வைத்து இறக்கவும்.
எண்ணெய் சூடானதும் சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு சிவந்ததும் கீறின மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி வேக வைத்துள்ள கறியை கொட்டி நன்கு கொதிக்க விடவும்.
தண்ணீர் சுண்டி எண்ணெய் மேலே வந்ததும் எலுமிச்சைச்சாறு ஊற்றி இறக்கி பரிமாறவும்.