தந்தூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சதைபற்றான கோழி - 1 கிலோ

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 5

இஞ்சி - 2 அங்குல துண்டு

பூண்டு - 10 பல்

கரம் மசலாப்பொடி - 1 தேக்கரண்டி

சீரகப்பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி

தயிர் - 1 மேசைக்கரண்டி

ஆரஞ்சு கலர்பொடி - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 1/4 லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கோழியை கழுவி சுத்தம் செய்து சின்ன துண்டங்கள் செய்யவும், நீரைபிழிந்து அதில் எல்லா மசாலா பொருட்களையும் சேர்க்கவும்.

இஞ்சி பூண்டை தோல் நீக்கி அரைத்து அதில் சேர்க்கவும். வெங்காயம், பச்சைமிளகாய் நீளமாக நறுக்கி போடவும்.

தயிரையும் உப்பையும் கலர்பொடியையும் சேர்த்து பிசறி வைக்கவும். இது குறைந்தது 2 மணி நேரம் ஊற வேண்டும்.

பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கோழி துண்டங்களை வெங்காயம் மிளகாயுடன் சேர்த்து எண்ணெயில் போடவும்.

மிதமான தீயில் சிவக்க வறுத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: