ட்ரை நெத்திலி வறுவல்
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 1/4 கிலோ
வேர்க்கடலை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - வறுக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நெத்திலி கருவாடை தலையை நீக்கி நன்கு அலம்பி சுத்தம் செய்து கொள்ளவும்.
சிறிது உப்பு, மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து ஒரு நாள் முழுக்க பிரீசரில் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து முதலில் வேர்க்கடலையை வறுத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் நெத்திலி கருவாடை சிறிது சிறிதாக போட்டு மொறுமொறுப்பாக வறுக்கவும். அடுப்பை மிக நிதானமாக எரிய விடவும். அதிக சூட்டினால் கருவாடு தீய்ந்து விடும். மொறுமொறுப்பு கிடைக்காது.
வெங்காயத்தை தோல் நீக்கி சிப்ஸ் கட்டரினால் மெலிதாக, நீளநீளமாக சீவிக்கொள்ளவும்.
இதனையும் அதே எண்ணெயில் மொறுமொறுப்பாக வறுக்கவும்.
கடைசியாக கறிவேப்பிலையை பொரித்துப்போட்டு, அனைத்தையும் கலந்து நன்கு ஆற விட்டு ஒரு பாட்டிலில் போட்டு வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
பாட்டிலில் கூடவே டிஷ்யூ பேப்பர் ஒன்றினையும் போட்டு வைத்தால் அதிகப்படி எண்ணெய் உறிஞ்சப்பட்டு விடும்.
நன்கு மொறுமொறுப்பாக வறுத்து விட்டால் இது சுமார் 1 -2 வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
அவசரத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.