டோஃபு இறால் பிரட்டல்
தேவையான பொருட்கள்:
டோஃபு - 400 கிராம்
இறால் - 200 கிராம்
பூண்டு பல் - 8
சிகப்பு குடைமிளகாய் - 1
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் - 1 தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
வெங்காயத்தாள் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
டோஃபுவை ஒரு அங்குல விரல் கண துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டை துருவியில் துருவவும்.
வெங்காயத்தாளை பொடிதாக நறுக்கவும்.
குடை மிளகாயையும் சின்ன துண்டங்களாக நறுக்கவும்.
இறாலை சுத்தம் செய்து கழுவிக்கொள்ளவும்.
பின்பு ஒரு நாண்ஸ்டிக் தவாவில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு டோஃபுவை லேசாக பொரித்து எடுக்கவும்.
பின்பு அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு துருவிய பூண்டை அதில் போட்டு வதக்கவும்.
மேலும் அதில் இறால் போட்டு வதக்கி குடை மிளகாயையும் சேர்த்து சோயா சாஸை ஊற்றி அதில் பொரித்து வைத்துள்ள டோஃபுவை போட்டு மூடி போட்டு வேகவிடவும்.
நன்றாக வெந்த பின்பு அதில் மிளகு தூள், அஜினோமோட்டோ, வெங்காயத்தாள் போட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
வெள்ளை சோற்றுடன் சாப்பிட ஏற்றது.