சௌராஷ்ட்ரிய கோழி வறுவல்
0
தேவையான பொருட்கள்:
கோழி - 1/4 கிலோ
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெங்காயம் - 2
தக்காளி - 1
அரைக்க:
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கிராம்பு - 4
கொத்தமல்லி தழை - 1/4 கப் (பாதி அரைக்க, பாதி மேலே தூவ)
பூண்டு - 5 பல்
கசகசா - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவற்றை மையாக அரைத்து வைக்க வேண்டியது.
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து கோழியை சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.
பாதி வெந்ததும் அரைத்து வைத்ததை போட்டு நல்ல கிளறி சிம்மில் வைத்து வேக விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.