சோர் மீன் ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் - 10
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 பின்ச்
புளி சாறு - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மசாலாபொடிகள், உப்பு, புளிச்சாறு, சோயா சாஸ் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
சுத்தம் செய்த மீன் துண்டங்களை ஒவ்வொன்றாக மசாலாவில் தோய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
தவாவை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு, நன்கு சூடு ஏறியதும் மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் மொறுமொறுப்பாக பொரித்து எடுத்து பரிமாறவும்.