சைனீஸ் சில்லி கோழி வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழியை ஊற வைக்க வேண்டிய பொருள்கள்:

சிறியதாக நறுக்கப்பட்ட கோழித் துண்டுகள் - 1 கிலோ

சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி

வினீகர் - 2 மேசைக்கரண்டி

சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

அஜினமோடோ - 1 தேக்கரண்டி

மசாலாவிற்கு:

பொடியாக நறுக்கப்பட்ட ஸ்ப்ரிங் ஆனியன் [வெங்காயத்தழை] - 1 கப்

இஞ்சி விழுது - 1 மேசைக்கரண்டி

பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

கீறிய பச்சை மிளகாய் - 5

பொடியாக நறுக்கப்பட்ட குடைமிளகாய் - 1

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழித்துண்டுகளை நன்கு சுத்தம் செய்து கொண்டு ஊற வைக்க வேண்டிய சாமான்களைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து நன்கு பிசிறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்தழையச் சேர்த்து வதக்கவும்.

பிறகு இஞ்சி விழுது,பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு ஊற வைத்துள்ள கோழியைச் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து சமைக்கவும்.

முக்கால் வாசி வெந்ததும் குடைமிளகாய்த்துண்டுகளைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் சமைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: