சைனீஸ் சிக்கன் ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1

பல்லாரி வெங்காயம் - 2

சோயா சாஸ் - 1 கப்

வினிகர் - 1/2 கப்

அஜினோமோட்டோ - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - தேவையான அளவு

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

கார்ன்ப்ளேவர் - 3 மேசைக்கரண்டி

மைதா - 2 மேசைக்கரண்டி

டால்டா - பொரிக்க

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயத்தை அரைத்துக்கொள்ளவும்.

பின் கோழிகறியை எழும்புடனே சிறு உறுண்டைத்துண்டுகளாக நறுக்கி அதில் அரைத்த வெங்காயம்,மிளகுத்தூள், சோயா சாஸ், வினிகர்,அஜினோமோட்டோ,உப்பு,மஞ்சள்தூள், சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின் இந்த கறியை குக்கரில் அரைவேக்காடு வேக வைத்து எடுக்கவும்.

பின் கார்ன்ப்ளேவரையும்,மைதாவையும் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

பின்பு வெந்த கறித்துண்டுகளை மாவில் தேய்த்து சட்டியில் காயும் டால்டாவில் போட்டு சிவக்கவிட்டு பொரித்து எடுக்கவும்

குறிப்புகள்: