சைனீச் சிக்கன் ப்ரைய்
தேவையான பொருட்கள்:
கோழி - 2 கிலோ
அஜினோமோட்டோ - 1/4 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 கப்
வினிகர் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2 என்னம்
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
கார்ன் ப்ளார் - 3 மேசைக்கரண்டி
மைதா - 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணைய் - 2 தேக்கரண்டி
டால்டா - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை தோலுரித்து நறுக்கி தண்ணீரில்லாமல் அரைக்கவும்.
கோழியை எலும்புடன் இருக்கும் துண்டுகளாகப் பார்த்து எடுத்து வைக்கவும்.
பின் அதனுடன் அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், சோயா சாஸ், அஜினோமோட்டோ, உப்பு, மஞ்சள் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் 1/2 வேக்காடு வேகவைத்து எடுக்கவும்.
கார்ன் ப்ளார், மைதாவை சேர்த்து சலித்து அதை தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வாணலியில் டால்டாவை போட்டு உருகி காய்ந்தபின், அரை வேக்காடு வெந்த துண்டுகளை மாவில் நனைத்து வாணலியில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.