சுவரொட்டி (பொரித்தது)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுவரொட்டி - 4

மசாலா தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - தேவையான அளவு

சின்ன வெங்காயம் - 200 கிராம்

கருவேப்பிலை - சிறிது

சோம்பு தூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

நெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சுவரொட்டியை சுத்தம் செய்துகட் செய்யாமல் அப்படியே குக்கரில் போட்டு 1 தேக்கரண்டி மசாலாதூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைவேக்காடாக வேகவிடவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கறி அரைவேக்காடாக வெந்ததும் சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் நறுக்கிய வெங்காயம், மீதி உள்ள மசாலாதூள்,மஞ்சள் தூள்,சீரகத்தூள்,மிளகுத்தூள்,சோம்புத்தூள்,சிறிது உப்பு சேர்த்து திரும்பவும் குக்கரில் நன்கு வேகவிடவும்.

பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி அதில் வெந்த கறியை போட்டு நன்கு பொறியவிடவும் தீயை குறைத்துவைக்கவும்.

கறி நன்கு பொறிந்ததும் கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: