சுக்கினி முட்டை வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுக்கினி - 1

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

பச்சரிசி மாவு - 4 மேசைக்கரண்டி

முட்டை - 1

மைதா (அல்லது) கோதுமை மாவு - 4 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வட்டமாக நறுக்கிய சுக்கினியை மைதா அல்லது கோதுமை மாவில் பிரட்டி எடுத்து அதை முட்டை கலவையில் தோய்த்து எடுக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முட்டை கலவையில் தோய்த்து எடுத்த சுக்கினியை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இதை புளிக்குழம்பு மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.

கொரியாவின் பழமையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று.