சீன பிஷ் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய அருள் மீன் - 1

அரிசி மாவு - 2 தேக்கரண்டி

வினிகர் - 1 தேக்கரண்டி

மிளகாய் சாஸ் - 100 மில்லி

பெரிய வெங்காயம் - 2

எண்ணெய் - 1/2 லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை சுத்தம் செய்து, இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

அரிசி மாவு, வினிகர், உப்பு சேர்த்து மீன் மீது தடவி 10 நிமிடங்கள் வைக்கவேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை லேசாக வதக்கி, அத்துடன் மிளகாய் சாஸ் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும்.

சற்று பெரிய கடாயில் அரை லிட்டர் எண்ணெய் விட்டு நன்றாக சூடு வந்தவுடன் மீனை மெதுவாக எண்ணெயில் விட வேண்டும்.

ஒரு நிமிடம் கழித்து மீனை புரட்டி போட்டு, இன்னும் ஒரு நிமிடம் வேகவிட்டு மெதுவாக எடுத்து ஒரு தட்டில் வைக்கவேண்டும்.

ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சாஸை, அதன் மீது ஊற்றி, சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

இது தனியாகவோ சோற்றுடன் சேர்த்தோ சாப்பிட சுவையாக இருக்கும்.