சில்லி சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பு நீக்கபட்ட சிக்கன் - 1/2 கிலோ (சிறு சிறு துண்டங்கள்)

ஊறவைக்க:

கார்ன் ஃப்ளார் மாவு - 1 தேக்கரண்டி

முட்டை - 1

சிவப்பு கலர் - 1/4 தேக்கரண்டி

சோயா சாஸ் மற்றும் டொமேட்டோ சாஸ் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வதக்குவதற்கு:

நறுக்கிய வெங்காயம் - 2

சோயா சாஸ் மற்றும் டொமேட்டோ சாஸ் - 1 தேக்கரண்டி

சிக்கன் க்யூப் - 1

கறிவேப்பிலை - 2 கொத்து

தக்காளி - 1/2

நறுக்கிய குடைமிளகாய் - 1

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனில் மேற்கண்ட பொருட்களை சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். எண்ணெயில் சிக்கனை முக்கால் அளவு வேகும் வரை பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.

பிறகு சிறிது எண்ணெயை காய வைத்து வெங்காயத்தை வதக்கி குடைமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின் சிக்கன் க்யூப் சேர்த்து வதக்கி சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி ஒரு தேக்கரண்டி கார்ன் ஃப்ளார் மாவை 4 தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறினால் கெட்டியாகத் தொடங்கும். பிறகு சாஸ்களை சேர்த்து தீயை அணைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: