சிம்பிள் மட்டன் பொரியல்
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மசாலாதூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
மல்லிதழை - சிறிதளவு
தண்ணீர் - சிறிதளவு
எண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கறியை சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதில் இஞ்சி பூண்டு விழுது கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மசாலாதூள், உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
கறி நன்றாக வெந்ததும் எடுத்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேக வைத்த கறியை அதில் போட்டு அதில் சிறிது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து பொரியவிடவும் (நன்றாக இல்லை)
பாதியிலேயே வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு நன்றாக கிளறவும்.
வெங்காயம், தக்காளி ஒன்றாக சேர்ந்தவுடன் மல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
ரசம், தேங்காய்பால் ஆணம் இதனுடன் சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்தி, பரோட்டாவுடனும் சாப்பிடலாம்.