சிம்பிள் சிக்கன் வறுவல்
0
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழியை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி, கழுவி வைக்கவும்.
கோழிக்கறியுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
சிக்கன் வெந்ததும் இறக்கவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்ததும், வேக வைத்த சிக்கனை கொட்டி, தண்ணீர் சுண்டி, வறுவலாக வரும் வரை வறுத்து இறக்கி பரிமாறவும்.