சிங்கப்பூர் சிக்கன் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1

உலர்ந்த மிளகாய் - 10

பச்சரிசி - 2 மேசைக்கரண்டி

தயிர் - 1/2 கப்

இஞ்சி - இரண்டு அங்குலத் துண்டு

பூண்டு - 8 பல்

கறிவேப்பிலை - 10 இலைகள்

கொத்தமல்லித் தழை - சிறிது

மைதா - 1/4 கப்

எலுமிச்சை சாறு - 4 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழிக் கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இரண்டு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி, கோழித் துண்டுகள் மீது தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.

மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, அரிசி, உலர்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக போட்டு மீதமுள்ள எலுமிச்சை சாறு சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவினை தயிருடன் சேர்த்து மிருதுவான விழுதாக வரும் வரை நன்கு கலக்கிக் கொள்ளவும்.

கோழித்துண்டுகளின் மேல் கத்தியை வைத்து கீறி விடவும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவினை கோழித்துண்டுகள் மீது நன்கு தடவி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுமார் 6 மணி நேரம் நன்கு ஊற விடவும்.

பிறகு ஊற வைத்த கோழியை எடுத்து மைதா மாவில் பிரட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மைதா மாவில் பிரட்டிய கோழித்துண்டுகளை எடுத்து, அதிகப்படியாக ஒட்டியிருக்கும் மைதாவினை உதரிவிட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொத்தமல்லித் தழையினை பொடியாக நறுக்கி அதில் தூவிப் பரிமாறவும்.

குறிப்புகள்: