சிக்கன் 65 (3)
0
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
முட்டையின் வெள்ளைக்கரு - 1
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 300 மில்லி லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழி எலுப்பில்லாமல் கிடைத்தால் வாங்கி கொள்ளலாம். எலும்புடன் இருக்கும் கோழியிலும் செய்யலாம்.
கொடுத்துள்ளவற்றை கோழியில் பிசறி ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் 6 (அல்லது) 7 துண்டுகளாக போட்டு மீடியம் தீயில் பொரித்து எண்ணெய்யை நன்கு வடித்து விட்டு பரிமாறவும்.