சிக்கன் 65 (2)
0
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
சோள மாவு - 3 தேக்கரண்டி
மைதா - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
ரெட் கலர் - ஒரு துளி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து ப்ரீசரில் அரை மணி நேரம் ஊற விடவும். பிசைவதற்கு தண்ணீர் தேவையில்லை தயிரில் இருக்கும் தண்ணீரே போதுமானது அரை மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து வைக்கவும்
பின் கடாயை காய வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் சிக்கனை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.