சிக்கன் 65
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
சிக்கன் 65 மசாலா - ஒரு பாக்கெட்
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தனி மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை பழம் - 1
தயிர் - 1 கப்
கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி (மொறுமொறுப்பாக வேண்டுமானால்)
முட்டை - 1
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை ஃபோர்க்கால் நன்றாக குற்றிவிட்டு, கத்தியைக் கொண்டு கீறிக் கொள்ளவும். (இப்படிச் செய்வதால் மசாலாவில் ஊறவைக்கும் போது சிக்கனின் உள்ளே நன்கு ஊறும்).
பிறகு சிக்கனுடன் தூள் வகைகள் மற்றும் கார்ன் ஃப்ளாரைச் சேர்த்து நன்கு கலந்து, தயிரை ஊற்றி நன்றாகக் கலக்கவும். பிறகு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டி, கடைசியாக முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கலக்கவும். (சிக்கன் முழுவதும் அந்த மசாலாவில் மூழ்கும்படி இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மசாலாவில் சிக்கன் நன்கு ஊறும்). சிக்கன் கலவையை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீஸரில் (Freezer) 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து எடுத்து சிறிது நேரம் வெளியில் வைத்திருக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, ஊறிய சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.