சிக்கன் வறுவல் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஊற வைக்க:

சிக்கன் - 1/2 கிலோ

பொடியாய் கிள்ளிய வரமிளகாய் - 6

கறிவேப்பிலை, மல்லி தழை - இரண்டும் சேர ஒரு கைப்பிடி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

வரமிளகாய் - 4

சீரகம், சோம்பு - தலா 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

கறிவேப்பிலை, மல்லி தழை - தலா ஒரு கைப்பிடி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகாய், தனியா, கரம் பொடிகள் - தலா 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளி மற்றும் வெங்காயத்தை கொஞ்சம் பெரியதாக நறுக்கி வைக்கவும்.

ஊற வைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை சிக்கனுடன் பிரட்டி கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயில் நல்லெண்ணய் ஊற்றி வரமிளகாய், சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

பின் சிறிது உப்புடன் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் மல்லித் தழை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி சேர்த்து பின் ஊற வைத்த சிக்கனை போடவும்.

நன்கு 10 நிமிடம் கிளறி பொடி வகைகளை சேர்க்கவும். தேவையெனில் சக்தி சிக்கன் மசாலா பொடியையும் சேர்க்கலாம்.

சிக்கன் வெந்ததும் தக்காளியை சேர்த்து பிரட்டவும். உப்பை சரி பார்க்கவும்.

தக்காளியை நன்கு குழையும்படி வதக்கவும். கடைசியாக ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பை அணைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

பருப்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

நல்லெண்ணெய் தான் இதன் ஸ்பெஷல்.