சிக்கன் வறுவல்
0
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/4 கிலோ
தனி மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 மேசைக்கரண்டி
கலர் பவுடர் - 2 சிட்டிகை
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து, அதனுடன் மிளகாய் தூள், மிளகுத் தூள், உப்பு, கலர் பவுடர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும்.
பிரட்டிய சிக்கனை ஃப்ரிஜ்ஜில் வைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளைப் போட்டு, இருப்புறமும் நன்கு வெந்து மொறுமொறுப்பாக வரும் வரை பொரித்து எடுத்து பரிமாறவும்.