சிக்கன் லெக் ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் லெக் - 1/2 கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

தயிர் - ஒரு கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

பட்டை - 1

கிராம்பு - 3

சோம்பு - சிறிதளவு

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கன் லெக், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், பட்டை, கிராம்பு, தயிர், உப்பு சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் தனியாக வைத்து விடவும்.

பின்னர் பிரஷர் குக்கர் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதில் பொடியாக நறுக்கின தக்காளியை சேர்த்து நன்றாக குழையும் வரை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

மசாலா கலவையுடன் ஊற வைத்து உள்ள சிக்கன் லெக் கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் இருக்கும் தண்ணீரே போதுமானது. பின்னர் குக்கரை மூடி ஒன்று அல்லது இரண்டு விசில் விடவும்.

குக்கரில் வேக வைத்த சிக்கனை ஒரு வாய் அகன்ற தவாவில் மாற்றி நன்றாக கொதிக்கவிடவும். பின்னர் அதனுடன் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

கரம் மசாலா சேர்த்தவுடன் மசாலா கலவை, சிக்கனுடன் சேர்ந்து திக்காக ஆகும். அப்போது அடுப்பை வேகப்படுத்தி நன்றாக வறுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: