சிக்கன் ரோஸ்ட் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 3 துண்டுகள்

முட்டை (மஞ்சள் கரு மட்டும்) - 1

தயிர் - 1 மேசைக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1/2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி

சீரகத் தூள் - 3/4 தேக்கரண்டி

ரோஸ்ட் பவுடர் - 1/4 தேக்கரண்டி

சிக்கன் பவுடர் - 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம், கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க

எண்ணெய் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தையும், கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து தூள் வகைகள் சேர்த்து தயிர், இஞ்சி, பூண்டு விழுது, முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும்.

கடைசியாக உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி, 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனைப் போட்டு, நன்கு மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.

சுவையான சிக்கன் ரோஸ்ட் தயார். வெங்காயம், கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: