சிக்கன் ப்ரை





தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த சிக்கன் - 1/2 கிலோ
நசுக்கிய பூண்டு - 50 கிராம்
நசுக்கிய இஞ்சி - 50 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுப் பொடி - 1/2 தேக்கரண்டி
சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
சோம்பு பொடி - 1/2 தேக்கரண்டி
விளக்கெண்ணைய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் சிக்கன், பூண்டு, இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள், விளக்கெண்ணைய் விட்டு 7 நிமிடம் வதக்கவும்.
பின் மூடி ஸ்ட்ரீம் வந்த உடன் விசில் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும்.
ஸ்ட்ரீம் போனதும், வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி கறியை போட்டு மிளகாய் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்பு தூள் போட்டு சிம்மில் வைத்து அப்படியே வறட்டி எடுத்து பரிமாறவும்.