சிக்கன் பிரை
0
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - 2 தேக்கரண்டி
வறுத்த வேர்கடலை - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி கரைசல் - 1/4 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வேர்க்டலை அரைத்து வைக்கவும்.
கோழி சுத்தம் செய்து மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
கடாயில் ஒரு குழைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.
இதில் பிரட்டிய கோழியை சேர்த்து வேக விடவும்.
கோழி பாதி வெந்ததும் மிளகு தூள், புளி கரைசல், வேர்கடலை மசாலா, உப்பு சேர்த்து (தேவை பட்டால் சிறிது நீர் சேர்த்து) நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விட்டு பரிமாறவும்.