சிக்கன் ஜிஞ்சர் ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 5 பல்

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 200 மில்லி லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழியை சிறு துண்டுகளாக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு, சீரகத்தூள், உப்பு, இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் 5 (அல்லது) 6 துண்டுகளாக போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: