சிக்கன் சாஸேஜ் ஃப்ரை





தேவையான பொருட்கள்:
சிக்கன் சாஸேஜ் - ஒரு பாக்கெட் (10 சாஸேஜ்கள்)
பொடியாக அரிந்த தக்காளி - 2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 கப்
அரைத்த இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
அரைத்த பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பொதினா - 1/2 கப்
பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1/2 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சாஸேஜ்களை மைக்ரோவேவ் அடுப்பில் அதிக சூட்டில் வைத்து ஒரு நிமிடம் சமைக்கவும்.
ஆறியதும் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுதுகள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வதக்கவும். குடமிளகாய், சோம்புத்தூள், மிளகாய்த்தூள், பொதினா, கொத்தமல்லி-இவற்றை தேவையான உப்புடன் சேர்த்து வதக்கவும்.
அரிந்த சாஸேஜ் துண்டுகளைச் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கிளறி பரிமாறவும்.