சிக்கன் சாப்ஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1 கிலோ

இஞ்சி - 1 அங்குலம்

பச்சை மிளகாய் - 10

பெரிய வெங்காயம் - 1

முட்டை - 3

எண்ணைய் -- பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் மூன்றையும் நன்கு அரைக்கவும்..

இநத மசாலாவுடன் உப்பு சேர்த்து கோழித்துண்டுகளுடன் சேர்த்து பிசிறி 15 நிமிடம் வைக்கவும்.

பின் தனி பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.

பின் குக்கரை திறந்து கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தி தனியே எடுத்து 4 நிமிடம் ஆற வைக்கவும்.

3 முட்டையுடன் உப்பு சேர்த்து நன்றாக நுரை வர அடிக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி காயவைக்கவும்.

கோழிதுண்டுகளை முட்டையில் முக்கி வாணலியில் காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: