சிக்கன் சாசேஜ் பொரியல்
தேவையான பொருட்கள்:
சிக்கன் சாசேஜ் (sausage) - 6 துண்டுகள்
பெரிய பல்லாரி - பாதியளவு
தக்காளி - பாதியளவு
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
நச்சீரகம் - சிறிதளவு
மசாலா தூள் - 1 மேசைக் கரண்டி
மிளகு தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
சோம்பு தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கன் சாசேஜை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதில் 1/2 மேசைக்கரண்டி மசாலா தூளை சேர்த்து பிரட்டி வைக்கவும்.
பல்லாரி பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப்ரைபானில் (fry pan) எண்ணெய் ஊற்றி சூடானதும் நச்சீரகம் போடவும்.
பின் நறுக்கிய பல்லாரி சிறிது போட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.
மீதி இருக்கும் பல்லாரி, தக்காளி, மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
அதில் மீதி இருக்கும் மசாலாதூள், மிளகு, சோம்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய sausage -ஐ சேர்த்து நன்றாக பிரட்டவும். மிதமான தீயில் நன்றாக வதக்கி வெந்ததும் இறக்கி பரிமாறவும்