சிக்கன் சம்பல்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
காய்ந்த மிளகாய் - 10
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
எலுமிச்சை - ஒன்று சிறியது
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
தக்காளி - 1
சர்க்கரை - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கி பச்சை மிளகாயை கீறியும் வைக்கவும்.
காய்ந்த மிளகாயை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து விழுதாக அரைக்கவும்.
சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள் மற்றும் பாதி உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
சிறிதளவு எண்ணெயில் மிளகாய் விழுதை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
ஊறவைத்த சிக்கனை அரை வேக்காடாக பொரித்தெடுக்கவும்.
மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
இதனுடன் வதக்கி வைத்துள்ள மிளகாய் விழுத்து சேர்த்து வதக்கவும்.
கரம் மசாலா சேர்த்து பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
பிறகு எண்ணெய் மேல வந்ததும் இறக்கி பரிமாறவும்.