சிக்கன் கேரட் ரோஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

பெரிய கேரட் - 1

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை

இஞ்சி விழுது - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி

தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனைக் கழுவி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைத்துக் கொள்ளவும். கேரட், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பிறகு சிக்கன், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வதங்கவிடவும்.

சிக்கன் நன்கு வதங்கி அரைவாசி வெந்ததும் கேரட், மிளகாய் தூள் சேர்த்து வேகவிடவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனில் இருக்கும் நீரே போதுமானது)

சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் கறிவேப்பிலை மற்றும் சாஸ் சேர்க்கவும்.

இதனை 15 – 20 நிமிடங்கள் மெல்லிய தீயில் வைத்து வேகவிட்டு, இடையே பிரட்டி விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், நெய் சாதம் ஆகியவற்றுக்கு அருமையாக இருக்கும்.