சிக்கன் ஃப்ரை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

கையால் பொடித்த மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

டொமேட்டோ கெட்சப் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

சிக்கன் கலர் மாறியதும் சோயா சாஸ், கெட்சப், இஞ்சி பூண்டு விழுது, தூள் (மிளகு தவிர) வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

மூடி வேக விடவும். நீர் சேர்க்க தேவை இல்லை. சிக்கன் வெந்ததும் மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும்.

நன்றாக பிரட்டி, எடுக்கும் முன் எலுமிச்சை சாறு விட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: