சிக்கன் ஃப்ரை
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ (சதைப்பகுதி மட்டும்)
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
ஓட்ஸ் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு துண்டு (2 இன்ச் அளவில்)
பூண்டு - 5 பல்
பேப்ரிக்கா பவுடர் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரைக்க:
கார்ன் ஃப்ளார் - 1 மேசைக்கரண்டி
மைதா மாவு - 1 மேசைக்கரண்டி
கடலை மாவு - 1 மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை பெரிய துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, கத்தியால் கீறிக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
கரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தண்ணீர் ஊற்றி தோசை மாவை விட சற்று நீர்க்கக் கரைத்து வைக்கவும்.
சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள விழுது, சோயா சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
ஊறிய சிக்கனை மாவுக்கரைசலில் தோய்த்து எடுக்கவும்.
பிறகு ஓட்ஸில் நன்கு பிரட்டி எடுக்கவும்.
இதேபோல் அனைத்து சிக்கன் துண்டுகளையும் மாவுக்கரைசலில் தோய்த்தெடுத்து, ஓட்ஸில் பிரட்டி எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து சிக்கன் துண்டுகளைப் பொரித்தெடுக்கவும். (அதிகமான தீயில் வைத்தால் ஓட்ஸ் விரைவில் கருகிவிடும். சிக்கனும் உள்ளே வேகாது. அதனால் கவனமாக பொரித்தெடுத்து பரிமாறவும்).