க்ரிஸ்பி சிக்கன் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ

இஞ்சி, பூண்டு விழுது - 4 தேக்கரண்டி

தனி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி

மைதா மாவு - 4 தேக்கரண்டி

சோள மாவு - 3 தேக்கரண்டி

அரிசி மாவு - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

ரெட் கலர் - ஒரு துளி

எண்ணெய் - பொரிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகு தூள், 2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின் வெந்த சிக்கனை உதிர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

அதனுடன் மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, ரெட் கலர், உப்பு சேர்த்து பிசைந்து ப்ரிட்ஜில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பின் சிறிது சிறிதாகக் கிள்ளி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: