க்ரிஸ்பி சிக்கன் லாலிபாப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் லெக் பீஸ் - 3 கிலோ

தந்தூரி மசாலா - 2 பாக்கெட்

கரம் மசாலா - 2 தேக்கரண்டி

சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி

எலுமிச்சை பழம் - 2

பட்டர் - 1/4 கப்

தயிர் - 400 கிராம்

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனைச் சுத்தம் செய்து ஒரு டூத் பிக்கால் எல்லா இடங்களிலும் குத்தி வைக்கவும். பிறகு அதில் ஒன்றரை எலுமிச்சையை பிழிந்துவிட்டு உப்புச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

தயிரை ஒரு காட்டன் துணியில் போட்டு 20 நிமிடங்கள் வைத்திருந்து, தண்ணீர் வடிந்ததும் எடுத்து அதனுடன் தந்தூரி மசாலா, கரம் மசாலா, சில்லி பவுடர் மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அதனுடன் சிக்கனைச் சேர்த்து நன்கு பிரட்டி 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு 10 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, மைக்ரோவேவில் 180 டிகிரியில் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பிறகு சிக்கனைத் திருப்பி 10 நிமிடங்கள் வைத்தெடுத்து, ஒரு பிரஷ்ஷில் பட்டரைத் தொட்டுக்கொண்டு ஒவ்வொரு சிக்கன் லெக் பீஸிலும் தடவி, மீண்டும் மைக்ரோவேவில் வைத்து 180 டிகிரியில் 10 நிமிடங்கள் வைத்தெடுத்து, சிக்கனை திருப்பிவிட்டு மீண்டும் 10 நிமிடங்கள் வைத்திருந்து வெளியே எடுக்கவும்.

கையில் பிடித்து சாப்பிட வசதியாக அலுமினியம் ஃபாயில் பேப்பரை நறுக்கி, அனைத்து லெக் பீஸிலும் கை பிடிக்கும் பகுதியில் சுற்றி வைக்கவும்.

குறிப்புகள்:

பிரியாணி, ரைத்தாவுடன் பரிமாறவும்.