க்ரிஸ்பி சிக்கன்
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
மைதா மாவு - 2 தேக்கரண்டி
முட்டை - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
வினிகர் (அல்லது) எலுமிச்சை சாறு - 1/2 மேசைக்கரண்டி
ப்ரெட் தூள் - 1 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நடுத்தரமான அளவில் சதுரத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, அதனுடன் மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது, சோயா சாஸ், உப்பு மற்றும் வினிகர் (அல்லது) எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி லேசாக அடித்து, மைதா மாவு, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
ஊறிய சிக்கன் துண்டுகளை முட்டை, மைதா மாவுக் கலவையில் தோய்த்து எடுத்து, ப்ரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.
பிரட்டி வைத்த சிக்கன் துண்டுகளை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்து பரிமாறவும.
குறிப்புகள்:
தக்காளி சாஸுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.